இந்திய ரூபாயின் மதிப்பு, நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வரும் நிலையில், கடந்த வாரம் 74 ரூபாய் வரை சரிந்தது.
ஏற்கனவே இது இந்திய பொருளாதாரத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், பல்வேறு நாடுகளில் உள்ள கரன்சிகளை கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ள அமெரிக்காவின் கருவூலத்துறை, இந்தப் பட்டியலில் இருந்து இந்திய ரூபாயை நீக்க முடிவெடுத்துள்ளது.
உலக அளவில் எந்த நாட்டு பணம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அந்த பணம் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெறும்.
இதுவரை இந்திய ரூபாயும் அந்த பட்டியலில் இருந்த நிலையில் ஜி.எஸ்.டி, பொருளாதார பின்விளைவு உள்ளிட்ட காரணங்களால் கண்காணிப்பு பட்டியலிலிருந்து இந்திய ரூபாய் நீக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சந்தேகத்திற்குரிய அந்நிய செலாவணி கொள்கை கொண்ட நாடுகளின் கவனிப்பு பட்டியலில் இந்தியாவை அமெரிக்கா வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post