இன்று (23.01.2023) தேனியில் அதிமுக கட்சி நிர்வாகியின் இல்லத் திருமணவிழாவில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பங்கு கொண்டார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பானது வழங்கப்பட்டது. மாலைத் தூவி, பூரண கும்பம் எடுத்து எதிர்கட்சித் தலைவர் அவர்களை தேனி அதிமுகவினரும் பொதுமக்களும் வரவேற்றனர். திருமணவிழாவில் மணமக்களை வாழ்த்திய பின்னர் தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு மிகப் பிரம்மாண்டமாக நெகிழ்ச்சியாக தேனி மாவட்டமே குலுங்குகின்ற அளவுக்கு உற்சாக வரவேற்பு வழங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, காலையிலேயே கடல் போல திரண்டிருக்கும் மக்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் அவர்கள், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கண்ட கனவினை நாம் எல்லோரும் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும், அதுதான் இருபெரும் தலைவர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய நன்றிக்கடன், என்று தெரிவித்தார். எத்தனையோ பேர் வேறுவேறு வழிகளில் சென்று விட்டனர், ஆனால் நம்முடைய வழி தனிவழியாகவும் நேர்மையான வழியாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்டார். ஏழைகள் சூழ் உலகு தமிழகத்தில் உருவாக வேண்டும் அதுதான் இருபெரும் தலைவர்களின் கனவு, அதற்காக நாம் பாடுபடவேண்டும் என்று அவர் தொடர்ந்து பேசினார்.
Discussion about this post