அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (21.01.2023) சனிக்கிழமை இரவில் நடந்தேறியிருக்கிறது. நேற்று லூனார் நியூயர் எனப்படும் சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டம் கலிபோர்னியாவில் களைகட்டியது. இரவு பத்து மணிவரை இந்தக் கொண்ட்டாட்டத்திற்கு அந்த பகுதியின் காவல்துறை அனுமதி அளித்திருந்த நிலையில், பத்து மணிக்கு பிறகும் கூட மானிட்டரி பூங்காப் பகுதியில் மக்களின் கொண்டாட்டம் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது. அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சுற்றி இருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார். நான்கு முதல் ஐந்து தடவை துப்பாக்கிச் சூடு கேட்டதாக அங்கே உணவகம் நடத்தி வரக்கூடிய ஒருவர் தகவல் அளித்திருந்தார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்தது. மேலும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுபோன்ற துப்பாக்கிச் சூடு அமெரிக்காவில் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. அங்கு துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும் உரிய கட்டுப்பாட்டினை வழங்காமல் இருப்பதால் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு நடைபெறுகின்ற என்று அங்கு இருக்கக் கூடிய காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 43,000க்கும் அதிகமான துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்றிருக்கின்றன என்றும், அதிகமானோர் இறந்துள்ளார்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளன. தற்போது நேற்று துப்பாக்கிச் சூட்டினை நிகழ்த்திய மர்ம நபரை கஷ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவரின் மனநிலை எப்படி இருக்கிறது? எதற்காக இந்த துப்பாக்கி சூட்டில் அவர் ஈடுபட்டார் என்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post