கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெலுங்குப்பாளையம் பகுதியில் புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்தப் பொதுகூட்டம் கோவை செல்வபுரம் கழக செயலாளர் விஜய் முன்னிலையிலும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்தப்பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்களும், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாக, சிறப்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அண்ணாவின் பெயரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர்சூட்டி நமது கட்சியை நிறுவினார், அவரது தலைமையில் அதிமுக தொடர்ந்து வெற்றியை மட்டுமே பெற்று வந்திருக்கிறது, குறிப்பாக அதிமுகவின் முதல் வெற்றி கோவையில் மேற்கு மாவட்டத்தில்தான் என்றும் பிறகு 1977ஆம் ஆண்டு முழுமையான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவர் நமது புரட்சித்தலைவர் அவர்கள் என்றும், அவர் முன்னாள் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 1980 எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கலைத்தனர், அதைத் தொடர்ந்து வந்த இடைத்தேர்தலிலும் புரட்சித் தலைவர் அவர்கள் வென்றார், மீண்டும் 1984ல் முதலமைச்சர் ஆனார், உலகத்திலேயே பிரச்சாரத்திற்கே செல்லாமல் படுத்துக்கொண்டே தேர்தலில் வென்றவர் புரட்சித் தலைவர் மட்டும்தான் என்று முன்னாள் அமைச்சர் அவர்கள் பேசினார்.
மேலும் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள் விடியா திமுக அரசை விமர்சித்தார். திமுக பதியேற்று இருபது மாதங்கள் ஆகிறது ஆனால் மக்களுக்கு எந்தவித நலத்திட்டங்களையும் சரியாக கொண்டு சேர்க்கவில்லை. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மக்களை அலைக்கழித்ததால் அதிக அளவு உயிர்கள் பலியானதற்கு காரணமாகியது இந்த விடியா அரசு என்று முன்னாள் அமைச்சர்கள் அவர்கள் விமர்சனம் செய்தார்.
Discussion about this post