விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்திருப்பதே பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இம்மலைக்கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலானது அந்தப் பகுதியிலுள்ள மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து ஊர் மக்களிடமும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை புரிந்த வண்ணம் உள்ளார்கள்.
தை மாதத்தில் நடைபெறும் தைப்பூசத்தை ஒட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ஆலயத்திற்கு பக்தர்கள் மிகுதியாக வந்து தரிசனம் கண்டு செல்கிறார்கள். இதனால் போலிசார் அதிக அளவில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் ஒரு மாதத்தின் பெளர்ணமி மற்றும் அமாவசை ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டும்தான் சாமி தரிசனம் காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனை ஒட்டி தற்போது தைப்பூசம் தொடங்கியுள்ளதால் ஜனவரி 19ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சாமி தரிசனம் காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளார்கள்.
மேலும் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி சாமி தரிசனம் காண்பதற்கு சதுரகிரி மலை ஏறுவதற்கு அதிகாலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் மலையிலேயே தங்குவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
Discussion about this post