அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி பிரான்சிஸ் டியாபோ வெற்றி பெற்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் ரபேல் நடால் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவுடன் மோதினார்.
இந்த போட்டியில் டியாபோ 6-க்கு 4, 4-க்கு 6, 6-க்கு 4, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இதையடுத்து நாளை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் பிரான்சிஸ் டியாபோ, ஆந்த்ரே ரூப்லெவ்வுடன் மோதுகிறார்.
Discussion about this post