கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பண்டிகை கால அலங்கார பொருட்களின் மதிப்பைவிட, இந்த ஆண்டு ஆகஸ்டில் 3 மடங்கு அதிக ஏற்றுமதியை இந்தியா செய்துள்ளது. இதன் மூலம், அமெரிக்காவுக்கு பண்டிகை கால அலங்கார பொருட்கள், ஜவுளி உள்ளிட்டவற்றை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா நுழைந்துள்ளது.
சீனாவில் கடுமையான கோவிட் தடுப்பு விதிகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, ஐரோப்பா, தைவான், ஜப்பான் ஆகிய நாடுகள் இந்தியா பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் 30 முதல் 40 சதவீதம் அதிக ஆர்டர்களை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post