இங்கிலாந்தின் அடுத்த பிரதமருக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதைத் தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கி கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது.
இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்துள்ள நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகிறது.
Discussion about this post