தேசிய கல்விக்கொள்கை, சர்வதேச தரத்திற்கு இந்தியாவின் கல்வியை மாற்றியமைக்கும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கல்வி உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங், தேசிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தம் மட்டுமல்ல என்றும், முற்போக்கான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டது என்றும் தெரிவித்தார்.
தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப, தேசிய கல்விக் கொள்கை உள்ளது என்றும், இது சர்வதேச தரத்திற்கு இந்தியாவின் கல்வியை மாற்றியமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post