சென்னை புறநகர் ரயில்களில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் தெரியாமல் வந்த பொதுமக்கள் பலர், பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை புறநகர் ரயில்களில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை காண்பித்த பின்னரே, ஒவ்வொருவருக்கும் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அதே சமயம், 2 தவணை செலுத்திக்கொள்ளாத பொது மக்கள் பலர், இதுகுறித்த தகவல் அறியாமல், புறநகர் ரயில்களில் பயணிக்க வந்தனர்.
ஆனால், 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாததால், அவர்கள் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியாமல், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
Discussion about this post