சென்னை மக்களின் நாவில் நீங்காத இடம் பெற்று, அதிகம் பேரால் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருளாக, 2021 ஆம் ஆண்டிலும் 6வது முறையாக சிக்கன் பிரியாணி முதலிடத்தைப் பெற்றுள்ளதாக, தனியார் உணவுப் பொருள் டெலிவரி நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு, தகவல் வெளியிட்டுள்ளது.
தனியார் உணவுப் பொருள் டெலிவரி நிறுவனம் ஆண்டு தோறும் ஆர்டர்களின் அடிப்படையில் மக்கள் அதிகம் விரும்பும் உணவுப் பொருட்கள் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 2021ஆம் ஆண்டில் 500 நகரங்களில், நுகர்வோர்களின் ஆர்டர்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் நிமிடத்துக்கு 115 ஆர்டர்களுடன் முதல் இடத்தினை சிக்கன் பிரியாணி பிடித்துள்ளது.
தொடர்ந்து 6வது முறையாக 2021ஆம் ஆண்டிலும் சிக்கன் பிரியாணி மக்களின் நாவில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு 4லட்சத்து 25ஆயிரம் புதிய நுகர்வோர்கள்,பிரியாணியை ஆர்டர் செய்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
சென்னை, கொல்கத்தா, லக்னோ மற்றும் ஹைதராபாத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக சிக்கன் பிரியாணி உள்ளது. சென்னையை பொருத்தவரையில் சிக்கன் பிரியாணிக்கு முதல் இடமும், மட்டன் பிரியாணிக்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.
குறிப்பாக பிரியாணியின் சுவையே அதனை அதிகம் விரும்பி சாப்பிடக் காரணம் என்கிறார்கள் பி.பி.க்கள்… அதாங்க பிரியாணி பிரியர்கள்…
சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி என பிரியாணியை ரசித்து சாப்பிடும் அதே வேளையில், சைவ உணவுக்கானஆர்டர்களும் 83 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இதேபோல், மக்கள் அதிகம் விரும்பும் சிற்றுண்டியாக 50 லட்சம் ஆர்டர்களுடன் சமோசா முதலிடத்தையும், 21
லட்சம் ஆர்டர்களுடன் பாவ் பஜ்ஜி இரண்டாம் இடத்தையும், அடுத்த இடத்தை குலாப் ஜாமூனும் பிடித்துள்ளது.
உள்ளது.
பிரியாணி வகையாக இருந்தாலும் சரி, சிற்றுண்டியாக இருந்தாலும் சரி, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்… அதேபோல் எதுவானாலும் அளவோடு உண்டு வளமுடன் வாழ்வோம் என்ற கோரிக்கையுடன்
Discussion about this post