திருப்பூர் மாவட்டம் இடுவாய் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பிக்கு, தேசிய ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் பள்ளி தலைமை ஆசிரியையாக இடுவாய்பாளையத்தை சேர்ந்த கீதா என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தலைமை ஆசிரியயை கீதா, மாணவ மாணவிகளை தரகுறைவாகவும், தகாத வார்த்தைகளால் பேசி பள்ளி கழிவறைகளை வற்புறுத்தி சுத்தம் செய்ய வைத்ததாக முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.
மாணவர்களின் புகாரையடுத்து தலைமை ஆசிரியை கீதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விரைவாக அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் வினித் மற்றும் எஸ்.பி. சசாங் சாய் ஆகியோருக்கு தேசிய ஆதி திராவிடர் நலத்துறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Discussion about this post