வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 25, 26 தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவோ, புயலாக மாற வாய்ப்பில்லை என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம், அதிகளவில் மழையும், தரைகாற்றும் வீசும் என தெரிவித்துள்ளது.
Discussion about this post