கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து செல்வது வழக்கம்.
ஐயப்பன் கோயிலில் நடைபெறும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக, கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மாலை அணிந்து பக்தர்கள் விரதம் மேற்கொள்வர்.
அதன்படி, கார்த்திகை மாதம் இன்று தொடங்கியதையடுத்து, பக்தர்கள் புனித நீராடி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து, துளசி மாலையை அணிந்து விரதத்தை தொடங்கினர். சென்னையில் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் உட்பட பல கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான ஐய்யப்ப மற்றும் முருக பக்தர்கள் சரவண பொய்கையில் புனித நீராடி மாலை அணிந்து கொண்டனர். சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், பக்திப் பரவசத்துடன் மாலை அணிந்து கொண்டனர்.
Discussion about this post