அதிகார மமதையில் திமுக அரசு, தமிழ்நாடு உருவான நாளையே மாற்ற முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவம்பர் 1-ம் தேதியே தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் என வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளினை சிறப்பிக்கும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். உலகத் தமிழர்களின் காவல் தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியிலும் தொடர்ச்சியாக தமிழ் வளர்ச்சி திட்டங்கள், தமிழ் நல் உள்ளங்கள் போற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டன என சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிகார மமதையில் திமுக அரசு, தமிழ்நாடு உருவான நாளையே மாற்ற முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, தமிழ் அறிஞர்களாலும், ஆர்வலர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவம்பர் 1-ம் தேதியையே தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post