செயற்கை கோள்களை ஏவுவதற்கான ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை பல முறை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை கண்டறிவதில், இஸ்ரோ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
விண்வெளிக்கு செயற்கை கோள்களை செலுத்தும் தொழில்நுட்பத்தில், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா சிறந்து விளங்கி வருகிறது. இந்த நிலையில், செயற்கை கோள்களை ஏவுவதற்கான ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் ஒரு முறை மட்டுமே பயன்படுவதை மாற்றும் விதமாக, அவற்றை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தும் முறைகளை கண்டறிவதில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், முதன்முறையாக இந்த முறையை வெற்றிகரமாக செயல்படுத்தி, தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த முறையை இஸ்ரோவிலும் செயல்படுத்த தீவிரம் காட்டி வரும் இந்திய விஞ்ஞானிகள், இதன் மூலம், செயற்கை கோள்களை ஏவும் திட்டங்களுக்கான செலவுகளை பெருமளவு குறைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post