நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்திக்கான சீதோஷண நிலை நிலவுவதால் உப்புளங்களை செப்பனிட்டும், சேமித்த உப்புகளை ஏற்றுமதி செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி, கோடியக்கரை, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் உப்பளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனால் உப்பு உற்பத்தி தொடங்க முடியாமல் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தற்போது உப்பு உற்பத்திக்கு ஏற்ற சீதோஷண நிலை நிலவுவதால், உப்பள பாத்திகளை செப்பனிடும் பணியில் தொழிலாளார்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட உப்பை, வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது ஒரு டன் உப்பு ரூபாய் ஆயிரத்து300 முதல் ஆயிரத்து 400 வரை விலை போவதாக உப்பள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post