கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் திரைப்படங்களை சிலர் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் திரைப்படங்களில் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்தநிலையில் திரைப்படங்களை சட்டவிரோதமாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு வந்த 9 திரையரங்குகளை தயாரிப்பாளர்கள் சங்கம் கையும் களவுமாக பிடித்துள்ளது.
ஆதலால் நாளை முதல் வெளியாக இருக்கும் அனைத்து திரைப்படங்களும் அந்த 9 திரையரங்குகளில் இனி திரையிடப்படாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது..
அதன்படி, கிருஷ்ணகிரியில் உள்ள முருகன், நயந்தாரா திரையரங்குகள், மயிலாடுதுறை கோமதி திரையரங்கு, கரூரில் உள்ள எல்லோரா, கவிதாலயா ஆகிய திரையரங்குகளில் இனி திரைப்படங்கள் வெளியாகாது.
அதேபோல் ஆரணி சேத்பட் பத்மாவதி திரையரங்கு, விருதாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா திரையரங்கு, பெங்களூர் சத்யம், மங்களூர் சினிபொலிஸ் ஆகிய திரையரங்குகளிலும் புதிய படங்கள் திரையிடப்படாது.
இதனால் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் வட சென்னை, சண்டைக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 9 திரையரங்குகளில் திரையிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post