ஆப்கனில் புதிதாக அமைய உள்ள இடைக்கால அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பேரணி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, அங்கு நிலவி வந்த அசாதாரண சூழ்நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. மேலும், புதிய இடைக்கால அரசை அமைக்க தாலிபன்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஆப்கனில் புதிதாக அமைய உள்ள இடைக்கால அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூல் நகரில் பெண்கள் பேரணி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆப்கன் பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கவும் தாலிபன்கள் முடிவு செய்துள்ளதால், தங்களின் உரிமையை நிலைநாட்ட இந்த போராட்டத்தை நடத்துவதாக பெண்கள் அமைப்பினர் கூறினர். மேலும், ஆப்கன் விவகாரத்தில் உலக நாடுகள் வேடிக்கை பார்க்க கூடாது எனக் கேட்டுக் கொண்ட அவர்கள், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கக் கூடாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post