புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் செலுத்த முடியாது எனக் கூறி திமுக-வினர் தகராறில் ஈடுபட்டனர்.
விராலிமலை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் வழக்கம் போல் கட்டணம் வசூலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திமுக கொடி கட்டிய கார், விஐபி வாகனங்கள் செல்லும் வழியாக கடந்து செல்ல முயன்றுள்ளது.
இதைப்பார்த்த ஊழியர்கள், திமுக கொடி கட்டிய காரை தடுத்து நிறுத்தி சுங்கக்கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், காரில் இருந்து இறங்கி தகராறில் ஈடுபட்டனர். “தங்களிடமே சுங்கக்கட்டணம் கேட்கிறாயா?” என சுங்கச்சாவடி ஊழியர்களை அபாச வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
“சுங்கக்கட்டணம் செலுத்த கூறினால் அமைச்சருக்கு போன் செய்வோம்” என அவர்கள் அடாவடியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தகராறில் ஈடுபட்ட திமுக-வினர் சுங்கச்சாவடியை சூரையாடிவிடுவார்களோ என்ற அச்சத்தில், வேறு வழியின்றி அவர்களை இலவசமாக செல்ல சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதித்துள்ளனர்.
Discussion about this post