கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் நிபா வைரஸால் வாளையாறு சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவில் நாளுக்கு நாள் கொரானா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அம் மாநிலத்தில் நிபா வைரசும் மக்களை மிரட்டி வருகிறது.
கோழிக்கோட்டில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ்- ஆல் உயிரிழந்ததை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 150க்கும் மேற்பட்டவர்களுக்கு இரத்த மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தமிழகத்திற்கு தினமும் வந்து செல்லும் நிலையில், கோவை, கேரளா எல்லைப்பகுதியான வாளையார் சோதனை சாவடியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் நேரில் ஆய்வு செய்தனர்.
Discussion about this post