இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ரோகித் சர்மா, புஜாரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 171 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது.
ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்து 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்சை நிதானத்துடன் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா இணை முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது. ராகுல் 46 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா – புஜாரா இணை ரன் குவிப்பில் ஈடுபட்டது.
Discussion about this post