வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்பது வானிலை மையத்தின் அறிவிப்பு.
நாளை மற்றும் நாளை மறுநாளும் நீலகிரி மற்றும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பந்தலூர், சேரங்கோடு, கூடலூர், அவலாஞ்சி, அப்பர்பவானி மற்றும் கிளன்மார்கன் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
Discussion about this post