மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில், நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வரும் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்களை எடுத்துள்ளது.
லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அணியில் ஏதும் மாற்றம் செய்யப்படாத நிலையிலும், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய அணி தடுமாறியது. இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த, தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்து ரஹானே 18 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேற, இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து, 3-வது போட்டியில் தனது இன்னிங்க்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. முதலாவதாகக் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் பர்ன்ஸ் மற்றும் ஹமீதின் கூட்டணி, முதல் நாளின் தங்களது 2-வது இன்னிங்க்ஸை, விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் குவித்து நிறைவு செய்துள்ளனர். இந்திய அணியை விட 42 ரன்கள் முன்னேறிய நிலையில், இன்று இங்கிலாந்து 2-வது நாளைச் சந்திக்க உள்ளது.
Discussion about this post