தேர்தலுக்காக திமுக அள்ளி வீசிய 500 வாக்குறுதிகளில் முக்கியமான சிலவற்றையாவது உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி இருக்கிறார்.
தேர்தல் அறிக்கையில் திமுக அரசு கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளான, 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவது, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், நகைக்கடன், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே முன்னளாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கை.
கடந்த அதிமுக ஆட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழக அரசு அதிக சாதனைகள் படைத்ததாக பெருமிதம் தெரிவித்த அவர்,
கடந்த ஆட்சியில் மத்திய அரசின் அதிகமான விருதுகளை உள்ளாட்சித்துறை சார்பில் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தின் சென்னை, கோவை மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டதாக தனியார் அமைப்பின் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டிய அவர்,
இது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனைக்கு தற்போது சான்றளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில், திமுக ஆட்சியில் கட்டாமல் விடப்பட்ட 3 லட்சத்து 5 ஆயிரத்து 397 வீடுகளுடன் சேர்த்து அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2020 வரை மொத்தம் 17 லட்சத்து 24 ஆயிரத்து 574 வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post