ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கனமழையின் போது வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான மரங்கள் சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
நேற்று பெய்த கனமழையின் போது சூறாவளி காற்றும் வீசியதால், மண்டலமாணிக்கம் அரசு பள்ளியின் எதிரே உள்ள 100 ஆண்டு பழைமையான மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சாலையில் மரங்கள் விழுந்ததால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கமுதியிலிருந்து மண்டலமாணிக்கம் திருச்சுழி வழியாக மதுரை, வீரசோழன், நரிக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் 10 கிலோ மீட்டர் சுற்றி சென்றன.
மழையால் கமுதி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்,பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
Discussion about this post