கென்யாவில் நடைபெற்று வரும் உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஷைலி சிங், வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
நைரோபியில் நடைபெற்று வரும் உலக இளையோர் தடகளப் போட்டியில், நீளம் தாண்டுதலில் பெங்களூருவைச் சேர்ந்த 17 வயதான ஷைலி சிங் 6 புள்ளி 59 மீட்டர் தூரம் தாண்டி இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெற்றுள்ள மூன்றாவது பதக்கம் இதுவாகும். 6புள்ளி 60 மீட்டர் தூரம் தாண்டிய ஸ்வீடன் வீராங்கனை மஜா அஸ்காக் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஷைலி சிங்கின் தங்கப் பதக்க வாய்ப்பு 1 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் நழுவியது.
Discussion about this post