2 முதல் 18 வயதினக்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் அல்லது அதன் பிறகு விரைவில் கிடைக்கும் என்று ஐசிஎம்ஆர் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தற்போது 18 வயதினருக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் நிலவுகிறது. இதனிடையே 2 வயது முதல் 18 வயதுக்கு உட்டபட்டவர்கள் பயன்பாட்டிற்கான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனை நடைபெறுகிறது. இந்நிலையில், பரிசோதனை வெற்றியடைந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் அல்லது அதன் பிறகு விரைவில் கிடைக்கம் என்று ஐசிஎம்ஆர்-இன் புனே இயக்குனர் பிரியா ஆபிரகாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Discussion about this post