பஞ்சாப் மாநிலம் அட்டாரி – வாகா எல்லை சுதந்திர தின கொண்டாட்டங்கள் களை கட்டியது.
வாகா எல்லையில் நடைபெற்ற நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில், இந்தியா – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
எல்லைப் பகுதிகள் அலங்கரிக்கப்பட்ட நிலையில், இருநாட்டு வீரர்களும் வழக்கமான நடைமுறைகளை மேற்கொண்டனர்.
மேலும் இருநாட்டு வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ராணுவ வீரர்களின் மிடுக்கான நடையுடன் நடைபெற்ற கொடி இறக்கும் நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
Discussion about this post