பட்டியலின பிரிவினரை இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்ய்யப்பட்டுள்ள நிலையில், என்னை கைது செய்ய முடியாது என மீரா மிதுன் போலீசாருக்கே சவால் விடுத்துள்ளார்.
LKG குழந்தையை காட்டிலும் மிக மிகச் சுமாரான ஆங்கிலத்தில்13 நிமிடம் பேசி சவால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் உலகின் ஒரே ஒரு சூப்பர் மாடல் மீரா மிதுன். விஜய், சூர்யாவின் வீட்டு அம்மணிகளை வம்பிழுத்து இரு மாதங்களுக்கு முன் இணையவாசிகளால் குமுறுப்பட்ட இவர், அடி கொஞ்சம் அதிகம் என்பதால் சில நாட்கள் கரண்டு பெட்டி எதிலும் கை வைக்காமல் இருந்தார்.
தான் நீண்ட நாட்களாக வளர்த்து வரும் அபிஷேக் என்பவருடன் குடிப்பது, கும்மாளம் அடிப்பது மிஞ்சிப் போனால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன் முகத்தை பலர் காப்பியடித்து விட்டார்கள் என பிரதமர் மோடியை டேக் செய்து பெட்டிஷன் அனுப்புவது. இதுதான் ஸ்பெஷல் சைல்டு மீராவின் தினசரி நடவடிக்கையாக இருந்து வந்தது.
கடந்த வாரம் மீரா மிதுனும் அவர் வளர்க்கும் கலர் கோழி குஞ்சும் சேர்ந்து அட்டவணை பிரிவினர் குறித்து தரக்குறைவாக லைவில் பேச, இணைய வாசிகளும், சமூக ஆர்வலர்களும் தற்போது அடுத்த ரவுண்டை ஆரம்பித்து விட்டார்கள். இம்முறை அடி கொஞ்சம் அன் லிமிட்டாகத்தான் விழுந்து கொண்டு இருக்கிறது
ஏனெனில் பொதுமக்கள் மட்டுமல்ல, போலீசாரும் இம்முறை சூப்பர் மாடலுக்கு சோதனையாக மாறியுள்ளனர். 6 நிமிடம் ஓடும் அந்த சர்ச்சை வீடியோவுக்கு 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விட்டில் பூச்சிகளை விளக்கில் தள்ளும் வேலைகள் மும்மரமாக நடந்து வருகின்றன. போலீசார் காட்டும் தீவிரத்தை பார்த்தால் கலர் கோழி குஞ்சும் அவரும் கைது செய்யப்படுவது உறுதி என்பது போல தகவல் வருகின்றன.
சூழ்நிலையை சுதாரித்து கொண்ட அந்த சூப்பர் ஜோடி, கைதுக்கு பயந்து, தங்கியிருந்த வீட்டில் இருந்து தலைமறைவாகி, தற்போது நித்யானந்தா போல ”முடிஞ்சா எங்களை புடிடா பாக்கலாம்” என்று வீடியோவில் சவால் விட்டு மக்களின் பொறுமையை சோதிக்க தொடங்கியுள்ளன.
விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ள நிலையில், நேரு, காந்தியெல்லாம் சிறைக்கு செல்ல வில்லையா…? அவர்களை போல சிறை செல்ல நான் அஞ்சவில்லை என்று வீடியோவில் சிரிக்காமல் காமெடி செய்துள்ளனர். பத்தாக்குறைக்கு என்னை கைது செய்ய முடியாது. அப்படி கைது செய்ய வேண்டுமெனில் அது கனவில் தான் நடக்கும் என்று பஞ்ச் டயலாக் வேறு.
இருபதே நாட்கள் பிக்பாஸில் இருந்து விட்டு 2 வருடமாக தமிழகத்தை இம்சித்து கொண்டிருக்கும் இந்த விளையாட்டு செய்திகளை விரைவில் முடித்து வைத்தால், போலீசாருக்கு பொங்கல் வைத்து விழா எடுக்க கூட தயாராக இருக்கிறார்கள் தமிழக மக்கள்.
Discussion about this post