ரெளடி பேபி சூர்யாவின் தற்போதைய கணவர் சிக்கந்தரை, நடு ரோட்டில் வைத்து செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், சூர்யாதேவி மற்றும் அவரது 3 ஆண் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர். ரெளடி பேபி சூர்யாவின் நடப்பு காதலன், கணவர், மேனஜர் என்று எப்படி வேண்டுமானாலும் இந்த அரிய உயிரினத்திற்கு அறிமுகம் தரலாம். இவரை, வனிதாவுடன் வம்பிழுத்து புகழடைந்த அல்லது புகழடைவதற்காக வனிதாவை வம்பிழுத்த சூர்யா தேவி, நடு ரோட்டில் வைத்து செருப்பால அடித்துள்ளார்.
செருப்பால் அடிக்கப்படுவதும், விளக்கமாத்தால் வெளுக்கப்படுவதும் டிக்டாக் பயித்தியங்களுக்கு புதிதல்ல. சந்தி சிரிக்க தயங்காதோர் சங்கத்தில் திவ்யா தொடங்கி, ரெளடி பேபி சூர்யா வரை ஏராளமான உறுப்பினர்கள் உண்டு. இவர்கள் எதற்கு திட்டி கொள்கிறார்கள்…? ஏன் அடித்துக் கொள்கிறார்கள்..? என்பதெல்லாம், கடவுள் துகள் கண்டறிவதை விட கடினமான காரியம். ஏனெனில் அது ஒரு தனி உலகம்.
யூ டியூபில் சேனல் ஆரம்பித்து, மாறி மாறி மானத்தை வாங்கிக் கொள்ளும் இந்த ஏலியன்கள், திடீரென பொதுவெளிக்கு வருவதுண்டு. அப்படித்தான், சிக்கர் என்ற செவ்வாய் கிரக வாசியும், சூர்யா தேவி என்ற அவதார் குட்டியும் மதுரை வீதியில் குதித்துள்ளன. சிக்கந்தர் பேச்சுவாக்கில் சூர்யா தேவியின் சுந்தர வாழ்வு குறித்து, யூ டியூப்-பில் சொல்லப் போக, சூடான சூர்யா தேவி, தனது சூயஸ் கால்வாய் வாயால், சிக்காவை சிப்ஸாக மெல்லத் தொடங்கினார்.
சூர்யா தேவியின் பஞ்ச் டயலாக்கை பொருட்படுத்தாத சிக்கா, தொடர்ந்து தன் வாயால் வாசல் கூட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் உக்கிரமான சூர்யா தேவி, மதுரையில் உள்ள தனது ஓடாத கடையில் டீ ஆத்திக் கொண்டிருந்த சிக்காவை, 3 ஆண் நண்பர்கள் துணையுடன் சென்று செருப்பால் அடித்துள்ளார்.
ரெளடி பேபியின் நடப்பு கணவர் சிக்காவின் செருப்படி காட்சிகள், இணையத்தில் வைரலாக பரவ, மனமுடைந்த அவர், நான் என்ன அவார்டா வாங்கினேன்…அடிதான வாங்குனேன்..அதை ஏன் இப்படி கொண்டாடுறீங்க என்று விரக்தியின் உச்சிற்கே சென்றார்.
இந்நிலையில், சூர்யாதேவி தன்னை தாக்கியதோடு, தொடர்ச்சியாக தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, நேற்றைய தினம் மதுரை சுப்ரமணியபுரம் காவல்நிலையத்தில் சிக்கந்தர் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், சூர்யா தேவி மீது 4 பிரிவுகளின் கீழ் சுப்ரமணியபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, சூர்யா தேவியை தேடி வருகின்றனர்.
சமூகத்தை சீரழிப்பதாக கூறி, ட்க்டாக் தடை செய்யப்பட்டது. ஆனால் டிக்டாக் போனாலும், டிக்டாக் பிரபலங்களால் சீரழிவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு இந்த செருப்படி காட்சிகளே சாட்சி.
Discussion about this post