மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெயரினை பயன்படுத்தி சிலர் தொலைபேசி வழியாக அழைத்து குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் பணம் செலுத்த வலியுறுத்துவதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் பெயரினை பயன்படுத்தி ஏதேனும் அழைப்புகள் வந்தால் எவரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும்,
அவ்வாறு வரும் அழைப்பிதழ் குறித்து உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர். தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறுமாவட்ட ஆட்சித் தலைவர் பெயரை தவறாக பயன்படுத்தி அவர்களின் நேர்மைக்கு கலங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
Discussion about this post