நான் அனிதா பேசுகிறேன்… அழியாத மருத்துவக்கனவை கண்களில் தேக்கி வைத்திருந்த அதே அனிதா தான்!
தேடிக்கொண்டிருக்கிறேன் அவர்களை.. ஓடோடி வந்து உதவுதாக கூறிய அந்த கால்களை.. என் மரணத்தின்போது வந்து நீட்டை ஓழிப்போம் என முழங்கியவர்களின் குரல்களை. கரிசனம் காட்டிய கயவர்களை!
தேடிக்கொண்டேயிருக்கிறேன். என் தேடல் நீண்டுகொண்டே போகிறது.. ஆனால் அவர்களை மட்டும் காணவில்லை. விடியல் தருவதாக கூறி இருட்டில் ஒளிந்துகொண்டார்கள்.
என் இறப்பை வைத்து அரசியல் செய்தீர்கள்! நீட்டை ஒழிப்போம் என்றீர்கள்! அதன்பெயரால் ஆட்சி பீடத்திலும் அமர்ந்துவிட்டீர்கள்.. ஆட்சியை பிடிக்க எத்தனையோ வழிகள் இருந்தும் என் இறப்பை அரசியல் ஆக்கி அதில் குளிர்காய வேண்டிய அவசியம் என்ன விடியல் கூட்டத்தாரே?
இதோ `ஆல் தி பெஸ்ட்’ நல்லபடியா நீட் எக்ஸாம் எழுதுங்க” என்கிறார் மாசு அண்ணன். பேட்டியை பார்த்ததும் பதறிப்போனேன். என்னுடைய நம்பிக்கை எல்லாம் நொறுக்கிப்போனது. நம்ப வைத்து கழுத்தருப்பவர்களே இன்னும் எத்தனை பேரின் உயிரை காவு வாங்கப்போகிறீர்கள்?
நீட் தேர்வால் என்னைபோல வேறுயாரும் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்து தானே உயிரைத்தியாகம் செய்தேன். ஆனால், என் அச்சம் உங்களால் இன்னும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஏசி ரூமில் அமர்ந்துகொண்டு அடுத்த பொய்யை வடித்துக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களே, நாங்கள் முயற்சித்தோம் முடியவில்லை என்று தானே கைவிரிக்கபோகிறீர்கள்.. போதும் உங்கள் பொய்களும் புரட்டுகளும்..
தேர்தலுக்கு மட்டும் தான் என்னுடைய குரல் உங்களுக்கு கேட்குமா??
Discussion about this post