ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் தேவையா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசியலமைப்புக்கு முரணான தேசத்துரோக வழக்கை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும். மேலும் நாடு முழுவதும் இந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “ஆங்கிலயேர்களின் காலனித்துவ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப்பிறகு தேவையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “மகாத்மா காந்தி மீது அடக்குமுறையை கையாள்வதற்காக பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம் இது” என குறிப்பிட்டவர், அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுபாடுகளை இந்த சட்டம் விதிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து இந்த மனு தொடர்பாக பதிலளிக்க கோரி மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டார்.
Discussion about this post