பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மற்றும் உள்ளூர் தலைவர்களை, விவசாயிகள் குழுவினர் விரட்டியடித்து தாக்குதல் நடத்தினர். மாநில காவல்துறையின் ஆதரவோடு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து, மத்திய பாஜக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாட்டியாலா மாவட்டம் ராஜ்புரா பகுதியில், பாஜக மாநில தலைவர் பூபேஷ் அகர்வால் தலைமையில், கட்சியின் உள்ளூர் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு பெரும் படையாக திரண்ட விவசாயிகள், பாஜக தலைவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். மேலும், அப்பகுதியை விட்டு பாஜக தலைவர்களை விரட்டியடிக்கும் நோக்கில், அவர்களை தாக்கியவாறு துரத்தியடித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பாஜக தலைவர்களை அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை உயரதிகாரிகள், விவசாய குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், பாஜக தலைவர்களை அப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
Discussion about this post