உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஜெப் பெசோஸ் இன்று விலக உள்ளார்.
57 வயதாகும் ஜெஃப் பிஸோஸ், இந்த மாதம் 20ம் தேதி விண்வெளிக்கு செல்ல உள்ளதால், சி.இ.ஒ பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தில் செல்லும் ஜெப் பெசோசுடன், அவரது சகோதர் மார்க், 82 வயது பெண் பைலட் வாலி ஃபங்க் ஆகியோர் செல்ல உள்ளனர். இதனிடையே, அமேசான் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக ஆண்டி ஜாஸி நியமிக்கப்பட உள்ளார். அவருக்கு அடிப்படை சம்பளமாக 13 கோடியே 13 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆண்டி ஜாஸிக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் பங்குகளை வழங்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டது. அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி டாலர் ஆகும். கடந்தாண்டு 38 ஆயிரம் 600 கோடி டாலரை அமேசான் நிறுவனம் வருமானமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post