தமிழ்நாடு முழுவதும் அலைச்சலுக்கு ஆளாகும் பொது மக்கள்! கண்டுக்கொள்ளாத தமிழ்நாடு அரசு!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைன் மற்றும் நேரடியாக என இரண்டு முறைகளில் டோக்கன் வழங்கப்படுவதால், மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
நாகர்கோவில் எஸ்.டி. இந்து கல்லூரி மையத்தில், 200-க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது.
இதனால், அதிகாலை 3 மணிமுதல் கால்கடுக்க காத்திருந்த ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றமடைந்தனர்.
பொதுமக்கள் நீண்ட வரிசையில், நெருக்கடியடித்து மணிக்கணக்கில் நிற்பதால், நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர் நல சுகாதார மையத்தில், தடுப்பூசிக்காக பொதுமக்கள் விடிய விடிய காத்திருந்தனர்.
ஐநூறு பேருக்கு மேல் காத்திருந்த நிலையில், 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால், பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடைவெளி கூட இல்லாமல் தடுப்பூசிக்காக திரண்டனர்.
ஆனால் 300 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால், அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 10 நாட்களுக்கு மேலாக இரண்டாவது டோஸ் செலுத்த மறுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போதைய திமுக அரசைப் போல, மக்களை அலைய வைக்கும் போக்கு, அதிமுக ஆட்சியில் இல்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சி அலுவலக மையத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்த 700க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடைவெளி இன்றி கூடினர்.
300க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால், எஞ்சியவர்கள் ஏமாற்றமடைந்தனர். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Discussion about this post