ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் கடல்பாசி வளர்க்க பெண்களுக்கு 10 ஆயிரம் செயற்கை மிதவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாம்பன், மண்டபம், முதல் தொண்டி, கீழக்கரை வரையிலான மீனவபெண்களின் வாழ்வாதாரத்தை பெருக்க மீன்வளத்துறை சார்பில் முதற்கட்டமாக ‘கபாபைக்கஸ்’ என்ற கடல் பாசி வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பாக் ஜலசந்தி கடல் பகுதி பெண்களுக்கு 10 ஆயிரம் செயற்கை மிதவைகளை வழக்க 60 சதவீதம் மானியத்துடன் மீன்வளத்துறை வழங்க உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இந்த திட்டத்தில் முதல் கட்டத்தை இடம் பெற்றுள்ள நிலையில் அடுத்தபடியாக தூத்துக்குடி, நாகை, தஞ்சை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்மூலம் பல ஆயிரம் பெண்கள் பயனடைவார்கள் என மீன் வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட செய்தியை காட்சிப்பதிவுகளுடன் பார்க்க…
⤵⤵↕↕⬇⬇⏬⏬????
Discussion about this post