பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சசிகுமார் செல்போனில் FREEFIRE விளையாட்டிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சசிகுமார் அறையில் யாருமில்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சக நண்பர்கள் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சசிக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கண்ட செய்தியை காட்சிப்பதிவு வடிவமைப்பில் காண கீழே உள்ள YOUTUBE-பிரிவில் உள்நுழையுங்கள்…
??⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬??
Discussion about this post