கடந்த 9-ம் தேதி திண்டிவனம் ரோசனை காவல்நிலையத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்தார்.
அதில் அடியாட்களை வைத்து செல்போன் மற்றும் சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், முகநூல் மூலம் சசிகலா ஆட்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இருந்து புகார் அளிக்கப்பட்டு இருந்தது
அதனடிப்படையில் கொலை மிரட்டல் (IPC 506(1), தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி ஆபாசமாக பேசி அவதூறு பரப்புதல் (67 IT ACT) ,
சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு (IPC507), அடுத்தவரை தூண்டிவிட்டு கலவரம் செய்தல் (IPC109) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரோசனை காவல்நிலையத்தில் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
Discussion about this post