கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததாகல் உணவின்றி வாடிய காகங்கள், புறாக்கள், நாய்கள் உள்ளிட்ட வாயில்லா ஜீவராசிககளுக்கு உணவு கொடுப்பதையே தனது லட்சியமாக கொண்ட மனிதருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயந்திலால்.இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக நடைப்பயிற்சியில் ஈடுபட கூடிய இவர், கொரோனா ஊரடங்கு என்பதால் மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ள கூடாது என அரசு தடை விதித்தது. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் புறாக்கள், காகங்கள் நாய்கள் உணவுக்காக சுற்றித் திரிவதை பார்த்து மனம் நொந்து போயுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தன்னால் முடிந்த உணவு வகைகளான கம்பு, மிச்சர், சேவ், பிஸ்கட் உள்ளிட்ட உணவுவகைகளை ஆள் நடமாட்டம் இல்லாத மெரினா கடற்கரையில் உள்ள புறாக்கள், காகங்கள், நாய்களுக்கு வழங்கத் தொடங்கினார். காலை 6 மணிக்கு காரில் வந்து இறங்கி உணவு வகைகளை எடுத்துக் கொண்டு சுமார் ஏழு எட்டு மணி வரை அந்த பகுதியில் உள்ள பறவைகளுக்கும் நாய்களுக்கும் இவர் உணவு வழங்கி மகிழ்வர்.
நாளடைவில் இவர் காரில் வருவதை பார்க்கும் பறவைகளும் நாய்களும் கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கின. இதனை தொடர்ந்து தான் கொண்டுவரும் உணவையும் அதிகரித்து வழங்க தொடங்கியுள்ளார். இது தனக்கு மன மகிழ்ச்சி தருவதாகவும் வாய் பேச முடியாமல் தவிக்க கூடிய இந்த வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு அளிப்பதில் அளப்பரிய மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
இதைப் பார்க்கும் அந்த பகுதியில் உள்ள காவலர்களும் பொதுமக்களும் ஜெயந்திலாலை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஆறறிவு படைத்த மனிதர்களே உதவி செய்வதில் இருந்து தங்களை விலக்கிச் செல்லும் இந்த காலகட்டத்தில் வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு படைக்கும் ஜெயந்திலால் நவீன வள்ளலார் என்று சொல்லலாம்.
“காக்கை, குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும்,மலையும் எங்கள் கூட்டம்” என்ற மகாகவி பாரிதியின் வரிகலக்கு இலக்கனமாக திகழும் இந்த மா மனிதரும் போற்றப்பட வேண்டியவரே.
Discussion about this post