சென்னையில் இயக்கப்படும் மினி பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த இரு தினங்களாக சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுடன் பொதுமக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் நிலையில், மினி பேருந்துகளிலும் இந்த சலுகையை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Discussion about this post