மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த கோரிய வழக்கில் தமிழக அரசின் அறிக்கை தெளிவில்லாமல் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அமர்வு தெரிவித்ததாவது:
- மாற்றுத் திறனாளிகளில் பலவகையினர் உள்ளனர். அவர்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப்படும் என எந்த தகவலும் இல்லை. அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்கள் குறித்து விரிவான அறிக்கை தேவை.
- சென்னையில் மட்டும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
- ஒரே ஒரு மாற்றுத் திறனாளிக்கு தடுப்பூசி போடுவதாக இருந்தாலும், அவர் இருக்கும் இடத்தை அடைந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தல்
- வழக்கறிஞர் கற்பகம் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரம் தள்ளிவைக்கப்படுகிறது
Discussion about this post