சட்டப்பேரவையில் ஆளும் கட்சியை திணறடித்துள்ளனர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள். அடுக்கடுக்கான கேள்விக்கணைகளால் திமுகவை துளைத்தெடுத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
சங்க நாதம் முழங்கி ஆளும் கட்சியை மிரள வைத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
கொரோனா தொற்று இருக்கும் சூழலில் மதுக்கடைகளை திறந்தது, யார் ஆட்சியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது தொடர்பாக சட்டபேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
மதுக்கடைகள் திறப்பு தொடர்பாக அதிமுக துணை கொறடா ரவி, எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக நொண்டி சாக்கு கூறினார்.
திமுக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் மா.சுப்பிரமணியன் பேச்சுக்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட்சி தலைவர், அதிமுக ஆட்சியில், கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதிலும், கையாள்வதிலும் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்ததாக குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதை அமைச்சர் செந்தில்பாலாஜி மூடி மறைப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
Discussion about this post