தனது 10 வயதில் திரைப்பயணத்தை ஆரம்பித்த விஜய் வெற்றி(1984),நான் சிவப்பு மனிதன்(1985),சட்டம் ஒரு விளையாட்டு(1987) என அவரது தந்தை இயக்கிய திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில், குழந்தை நட்சத்திரமாக களமிறங்கினார்…
பின்னர் 1992 ம் ஆண்டு தன் 18ம் வயதில் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து செந்தூரப் பாண்டி,தேவா,ரசிகன்,சந்திரலேகா,விஷ்ணு,ராஜாவின் பார்வையிலே என கதாநாயகனாக மக்களிடையே பிரதிபலித்தார்.
ஜானகி சௌந்தர் இயக்கத்தில் வெளியான இந்த ராஜாவின் பார்வையிலே படத்தில் தான் நடிகர் அஜீத் உடன் இணைந்து நடித்திருந்தார்.பின்னர் செல்வா,மாண்புமிகு மாணவன்,வசந்த வாசல்,பூவே உனக்காக,கோயம்புத்தூர் மாப்ளே,காதலுக்கு மரியாதை என தொடர்ந்து ஏ.வெங்கடேசன்,எம்.ஆர்.சச்சுதேவன்,விக்ரமன்,சி. ரெங்கநாதன்,ஃபாசில் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்…
1997 ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளிவந்த சூர்யா-வின் முதல் படமான நேருக்கு நேர் திரைப்படத்தில் சிம்ரன்,கௌசல்யா உள்ளிட்டோருடன் நடித்தார்.
அதைத்தொடர்ந்து ஒன்ஸ்மோர், லவ் டுடே,காலமெல்லாம் காத்திருப்பேன்,நிலாவே வா,பிரியமுடன்,நினைத்தேன் வந்தாய்,மின்சாரக் கண்ணா,நெஞ்சினிலே,என்றென்றும் காதல்,துள்ளாத மனமும் துள்ளும்,பிரியமானவளே,குஷி போன்ற படங்களில் ஜோதிகா, ஷில்பா ஷெட்டி,ரம்பா,இசாகோபிகர்,சுவலட்சுமி,டிம்ப்பல்,தேவயானி,சாலினி உள்ளிட்ட அப்போதைய முன்ணனி பிரபல நடிகைகளுடன் பணியாற்றி திரைத்துறையில் வலம் வர தொடங்கினார்..
ஷாஜகான்,பத்ரி,பிரெண்ட்ஸ்,பகவதி,யூத்,தமிழன்,திருமலை,புதிய கீதை,வசீகரா,மதுர,கில்லி,சிவகாசி,சச்சின்,திருப்பாச்சி,போக்கிரி,அழகிய தமிழ் மகன் போன்ற படங்களின் மூலம் 90’ஸ் கிட்ஸ்களின் பிரிக்கமுடியாத ரசிகர்பந்தத்தைப் பெற்றார்…
குருவி,வேட்டைக்காரன்,வில்லு,சுறா,வேலாயுதம்,காவலன் போன்ற படங்கள் சறுக்கல்களை தந்தாலும் துப்பாக்கி,நண்பன்,தலைவா,கத்தி,ஜில்லா,புலி,தெறி,மெர்சல்,பைரவா,சர்கார்,பிகில்,மாஸ்டர் என 64 படங்கள் நடித்த அற்புத திறமை படைத்தவர் தான் ரசிகர்களின் இளையதளபதி..
முகபாவணை,நகைச்சுவை,சண்டை,நடனம் போன்ற திரைத்துறைக்கு தேவையான அனைத்து திறமைகளையும் கொண்ட “விஜய்”- தன் பாடல் கலையாலும் பல்வேறு ரசிகர்களை கவர்ந்துள்ளார்….
தேவா இசையில் ரசிகன் படத்தில் பாடகர் பயணத்தை ஆரம்பித்த விஜய் ,பாடகி சித்ராவுடன் இணைந்து பாம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி என முதல் பாடலைபாடினார்.
அய்யய்யா அலமேலு ஆவின் பசும்பாலு,கோத்தகிரி குப்பம்மா,சிக்கன் கரே,அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி,திருப்பதி போனா மொட்ட, ஓஹ பேபி பேபி மற்றும் என்னை தாலாட்ட வருவாளா? என தொடங்கிய அவர் வருடல் குரலில் ரசிகர்களின் வருகை எகிறத் தொடங்கியது.
”இந்தப்பாடலைப் பாடியவர் உங்கள் விஜய்” என்ற வாசகமும் மிளிரத்தொடங்கியது..
தம்மடிக்கிற ஸ்டைல பாத்து,காலத்துக்கு ஒரு கனா,நிலவே நிலவே,மௌரியா மௌரியா,
தங்கநிறத்துக்கு தமிழ்நாட்ட எழுதித்தரவா? என அப்போதைய ஏழு கோடி மக்கள் தொகையையும் எட்டிப்பார்க்கச் செய்தார்…
என்னோட லைலா,கொக்ககோலா பிரவுன் கலருடா,உள்ளத்தைக் கிள்ளாதே,வாடி வாடி கைப்படாத சிடி, கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன் உலகத்தில என தமிழக ரசிகர்களை கடந்து இந்தியளவில் புகழ்பெற்றார்..
வாங்கண்ணா வணக்கங்கண்ணா,கண்டாங்கி கண்டாங்கி,ஏன்டி ஏன்டி,செல்ல குட்டி,நெஞ்சுக்குள்ளே குடியிருக்கும் என 1994-ல் பம்பாய் சிட்டியில் தொடங்கி 2021 -ல் குட்டி ஸ்டோரி வரை விஜய் 32 பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழக அரசு திரைப்பட விருது, காஸ்மோபாலிடன் விருது, இந்தியா டுடே விருது, சைமா விருது, விஜய் விருது, எடிசன் விருது, விகடன் விருது என பல்வேறு பதக்க,பட்டங்கள் பெற்று தமிழ்த்திறையுலகில் உச்சம்தொட்டு, தனித்திறனுடன் உலா வருகிறார்..
நாளைய தினம் 47-வது (22-JUNE-1974) அகவையில் அடியெடுத்து வைக்கும் இளைஞர் ரசிகர்களின் இளையதளபதிக்கு நியூஸ் ஜெ -செய்திதொலைக்காட்சி சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்…….
Discussion about this post