கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதனை பதிவு செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில், அவற்றை தமிழ்நாடு அரசு மறைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த மே மாதம் 17ம் தேதி, மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் 10 லட்சம் பேரில் பூஜ்ஜியம் புள்ளி 61 சதவீதம் பேருக்கு ரத்தம் உறைவு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதிப்பை பதிவு செய்யவும் மாநில அரசுகளுக்கு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ரத்தம் உறைவு ஏற்பட்டால் எங்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களோ அந்த மையமத்தில் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவுறுத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு இதுவரை எந்த அறிவிப்பு வெளியிடாமல், அதனை மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகள் குறித்த விரிவான பகுப்பாய்வும் தமிழ்நாடு அரசு நடத்தவில்லை என குற்றம்சாட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துவது மாநில அரசின் முக்கிய பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Discussion about this post