தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்குவது குறித்தும், சிறிய ஜவுளி கடைகள், வழிப்பாட்டுத் தலங்கள் ஆகியவற்றிக்கு அனுமதி வழங்குவது குறித்தும் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை மேற்கொள்ளுகிறது. அப்போது, அத்தியாவசிய கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நோய் பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் குறைந்த அளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post