சேலம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது போல கொரோனா நிவாரணம் தற்போது வழங்கப்படவில்லை என மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை, மாற்றுத்திறனாளிகள் விடுதலை முன்னணி சங்கத்தினர் நேரில் சந்தித்தனர். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்க ஆவண செய்யுமாறு கோரிக்கை மனுவை, ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணியிடம் வழங்கினர். கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது திமுக அரசிடமிருந்து நிவாரணம் கிடைக்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post