தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மிககனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேபோல கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்பது வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பாகும். அதேபோல மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், 21 ஆம் தேதி வரை அரபிக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
Discussion about this post