அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், சரளா வித்யா நாகலா என்பவரை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த பரிந்துரையை செனட் சபை ஏற்று அங்கீகரித்தால், கனெக்டிகட் மாகாணத்தில், கனெக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் தெற்காசியாவை சேர்ந்த ஒருவர் அமர்வது இதுவே முதல் முறை ஆகும்.
செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் தலா 50 இடங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையை தீர்மானிக்க துணை ஜனாதிபதி, ஓட்டு போட முடியும். எனவே 51 வாக்குகளுடன் சரளா வித்யா நாகலாவின் நியமனம் செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post